மோந்தா’ புயல் ஆந்திராவில் நேற்று இரவு காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதி பாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 110 கிலோமீ்ட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் காக்கிநாடா, மசூலிப்பட்டினம், கோன சீமா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை மோந்தா புயல் ஏற்படுத்தி உள்ளது. புயலுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. 2 பெண்கள் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன. 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,204-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.