திருச்சி, குண்டூர் பகுதியில் சாலையோரம் இறந்து கிடக்கும் மாட்டால் கடுமையான துர்நாற்றம்: அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை…!
திருச்சி மாவட்டம், குண்டூர் பஞ்சாயத்து, மாத்தூர் ரவுண்டானா பகுதியில் இன்று( அக்.24) காலை 5 மணி முதல் சாலையோரத்தில் மாடு ஒன்று இறந்து கிடக்கிறது. அந்த மாட்டுக்கு யாரும் உரிமை கோர வில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை அந்த மாட்டை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மாடு இறந்து கிடக்கும் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள் உள்ளன. இந்த இடத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி தான் சென்று வருகின்றனர். இறந்து போன மாட்டை புதைப்பதற்காக சாலையின் அருகே ஒரு குழி தோண்டப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த அதிகாரிகளும் நேரில் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பொதுமக்களின் நலனை கரத்தில் கொண்டு இறந்த மாட்டை இங்கே புதைக்காமல் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.