Rock Fort Times
Online News

இரண்டு குழந்தைகளின் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…!

கரூர் மாவட்டம், கோட்டக்கரையான் பட்டியைச் சேர்ந்த மனோன்மணிக்கும், திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டநிலையில் மனோன்மணி குடும்பத்தினர் மகளை சமாதானப்படுத்தி கணவர் வீட்டில் விட்டுவிட்டு சென்றனர். அதன் பின்னர் மனோன்மணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனோன்மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மனோன்மணி சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மனோன்மணி உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்