Rock Fort Times
Online News

மதுரையில் இருந்து சென்னை சென்ற விமானத்தின் கண்ணாடி உடைந்ததால் நடுவானில் பரபரப்பு…!

மதுரையில் இருந்து இன்று (அக்.11) அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்புற கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனை விமானி கவனித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்க விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கண்ணாடியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது கண்ணாடி உடைந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த விமானம் மீண்டும் மதுரை செல்வது ரத்து செய்யப்பட்டது. நடுவானில் விமானத்தின் கண்ணாடி உடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்