இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.