Rock Fort Times
Online News

தனிப்பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய நில அளவையர் கையும், களவுமாக பிடிபட்டார்…!

கரூர் மாவட்டம், புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். கரூர் டிஎன்பிஎல்-ல் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மற்றும் மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்காக திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலஅளவை பிரிவில் நில அளவையராக பணிபுரியும் அருண் (வயது 34)  என்பவரை அணுகியபோது தனிப்பட்டா வழங்க அருண் ரூ.24 ஆயிரம் கேட்டு, இறுதியாக ரூ.9 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத   ராஜேந்திரன்,   திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், லஞ்சப் பணத்தை நில அளவையர் அருணிடம், ராஜேந்திரன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் ஆகியோர் பாய்ந்து சென்று அருணை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்