மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்தநிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று அவர் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று( அக்.6) காலை உடல் நலக்குறைவால் அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸை அவரது மகன் அன்புமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். இதனையடுத்து, ஏற்கனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிமுக கட்சி தலைவர் வைகோவையும் முதல் அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.

Comments are closed.