தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் திருச்சி காவிரி கரை பகுதியில் தினம், தினம் போக்குவரத்து நெரிசல்…!
திருச்சி, சிந்தாமணி பஜார் அண்ணா சிலை அருகே மாநகராட்சி சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் காரணமாக சாலையின் நடுவில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. அது இன்னும் முழுமையாக மூடப்படாமல் மேடு பள்ளமாக இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் ஒரு புறமும், சென்னை பைபாஸிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்கள் மறுபுறம் என செல்வதால் காவிரிப்பாலத்தின் இருபுறமும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டாலும், கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக அணிவகுத்து காத்திருக்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், ஆகவே வாகனங்கள் எளிதில் சென்று வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.