Rock Fort Times
Online News

கரூர் துயர சம்பவம்: மாநில நெடுஞ்சாலையில் எப்படி அனுமதி வழங்கினீர்கள்?- நீதிபதிகள் சரமாரி கேள்வி…!

கரூரில், செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(அக்.3) தொடங்கியது. விசாரணையின் போது நீதிபதிகள் அரசு தரப்பிடமும், தவெகவிடமும் சரமாரி கேள்விகளை முன் வைத்தனர். மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர், சுகாதார வசதிகளை சட்டம்- ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கையில், அனுமதிக்கப்பட்ட இடத்தில் உரிய அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அனுமதி அளிக்கப்பட்டது. சாலையின் வடக்கேதான் அனுமதி வழங்கப்பட்டது. என்றனர். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசும், தவெகவும் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்