மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கும், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் மதுபாலன், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகரப்பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Comments are closed.