கரூர், நாமக்கல்லில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்…!
அடுத்த ஆண்டு(2026) நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். கடந்த வாரம் நாகை திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், இன்று (செப்.27) சனிக்கிழமை கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக த.வெ.க தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர், திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நம்பர் ஒன் டோல்கேட், முசிறி, வழியாக நாமக்கல் புறப்பட்டுச் சென்றார். நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையை முடித்தபிறகு இன்று மாலை கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Comments are closed.