செல்வப் பெருந்தகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்…!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் சிங்காரத்தோப்பு அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் அருகே அருகே இன்று (செப்.26)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இனி செல்லா பெருந்தகை என கோஷமிட்டனர். தொடர்ந்து செல்வப்பெருந்தகை உருவ படத்தை தீயிட்டு கொளுத்த முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் தலைவரும், மாவட்ட பேரவை செயலாளருமான கார்த்திகேயன், மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி, பகுதி செயலாளர் அன்பழகன், ரோஜர், கலைவாணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், ஐடி பிரிவு வெங்கட் பிரபு, கலைபிரிவு ஜான் எட்வர்டுகுமார், இளைஞர் பாசறை லோகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் வக்கீல் சுரேஷ்பாபு, பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஷாஜகான், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், மாணவர் அணி துணைதலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஷ்வரி, மகளிர் அணி இணை செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அப்பா குட்டி, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வாழைக்காய் மண்டி சுரேஷ், வணக்கம் சோமு, ஐடி பிரிவு ராதா வேங்கடநாதன், கிஷோர், நாகு, புத்தூர் ரமேஷ், விஸ்வா, கதிரவன், நாகராஜ், மலைக்கோட்டை வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.