முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- வருகிற அக்டோபர் 1-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையாகவும், 2- ந் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை நாட்கள் முறையே புதன் மற்றும் வியாழக்கிழமையில் வருகின்றன. அடுத்து வரும் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. எனவே 3-ந் தேதி ஒருநாளை மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். இப்பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களும் இவ்விடுமுறையை நன்றாக கொண்டாடிவிட்டு பணிக்கு மகிழ்வுடன் வருவார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே இந்நாட்கள் தசரா விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் 3-ந்தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.