வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர்களை நீக்கும் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தி சமீபத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. எனினும் இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இந்த நிலையில், தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணி அனைத்து சுற்று முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது புதிய நடைமுறையில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் இறுதிக்கு இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அதாவது 20 சுற்றுகள் இருந்தால் 18வது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தசுற்று வாக்குகள் எண்ண வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுபிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.