திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிவது வழக்கம். திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் தொடங்கி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த நாளில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாதவர்கள் ரூ.300 சிறப்பு தரிசன வரிசையில் சென்று, சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்கு மற்றொரு வழியும் உள்ளது. இந்த டிக்கெட்டுகள் ஆப்லைனில் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பதி அலிபெரி நடைபாதை துவங்கும் இடத்தில் உள்ள கோவிலில் தினமும் ஸ்ரீநிவாச திவ்ய அனுகிரக ஹோமம் நடைபெறும். இதில், கலந்து கொள்பவர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியீடு நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன டிக்கெட் பற்றிய மறு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருப்பதி கோவில் தேவஸ்தானம் போர்டு அறிவித்து ள்ளது.
Comments are closed.