Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏற்பு கூட்டம்:* நாளை (செப்.20) பாலக்கரை பகுதியில் நடக்கிறது…!

“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு” ஆகிய தீர்மான ஏற்பு கூட்டங்கள் செப்டம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை( செப்.20 ) திமுக தீர்மான ஏற்பு கூட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்பு கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், நாளை (செப்.20)  மாலை 4.30 மணிக்கு திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்