Rock Fort Times
Online News

ஆயுத பூஜை , தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்…!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திருச்சி வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள அறிக்கையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20, 27 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மட்டும் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதேபோல், நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த ரெயில் இயக்கப்படும். நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரெயில், மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடையும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் ரெயில் இயங்கும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை( செப்டம்பர் 17) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்