Rock Fort Times
Online News

பயணிகள் பாதுகாப்பு குறித்த மண்டல மாநாடு: கொச்சி ஏர்போர்ட்டில் சி.ஐ.எஸ்.எப். நடத்தியது…!

கொச்சியில் உள்ள சிஐஎஸ்எஃப் (CISF) மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, விமானப் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்து பலப்படுத்துவதற்காக, செப்டம்பர் 2025ல் தென்னிந்தியாவிற்கான செயல்பாட்டு மாநாட்டை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மாதம் செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தியது. சிஐஎஸ்எஃப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ ஜோஸ் மோகன் ஐ.பி.எஸ் முன்னிலையில், சிறப்பு இயக்குநர் ஜெனரல் (APS) ஸ்ரீ பிரவீர் ரஞ்சன் ஐ.பி.எஸ் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் தென்னிந்தியாவின் உயர் விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டு விமானப் பயணத்தை எவ்வாறு பாதுகாப்பானதாகவும், பயணிகளுக்கு ஏற்றதாகவும் மாற்றுவது என்பது குறித்து விவாதித்தனர். சிஐஎஸ்எஃப் இன் சிறப்பு இயக்குநர் ஜெனரல், பாதுகாப்பை “இயக்கவியல் மற்றும் மக்களை மையமாகக் கொண்டதாக” மாற்றுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ந்து வரும் உலகளாவிய விமானப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள, விமானப் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்து, பலப்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு, முழு உடல் ஸ்கேனர்கள் (Full-body scanners) போன்ற புதிய தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட விமானப் பயணப் பாதுகாப்பிற்கான இணையப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கொச்சி விமான நிலையம் (CIAL) தொடர்ந்து விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விமானப் பாதுகாப்பு குறித்த பயணிகளின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்