பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், எஸ்.எஸ்.ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக், அருணகிரி, நகரக் கழகச் செயலாளர் பாண்டியன், பகுதி கழக செயலாளர் பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் கழக செயலாளர்கள் பி.முத்துக்குமார், ஜெயசீலன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தாமஸ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பு செழியன், மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் பாலமூர்த்தி, பண்ணையார் பிரேம்குமார், கோகூர் முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்னகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.