பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அருண் நேரு எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூர் எம்பி அருண் நேரு தலைமையில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, உள்ளிட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.