தனது மகன் குறித்தே சிந்திக்கிறார், ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார்…* மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மதிமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்த மல்லை சத்யா இன்றைய தினம் ( செப்.9) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். இதற்கு
மல்லை சத்யா கூறுகையில், என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் என கூறியுள்ளார்.

Comments are closed.