ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மல்லை சத்யா நடத்தினார். இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ நடவடிக்கை எடுத்தார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டதாக வைகோ அறிவித்துள்ளார்.

Comments are closed.