இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார். அவர் நாளை (செப்டம்பர் 3) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவில் சுற்று வட்டாரத்தில் தங்கியிருந்த யாசகர்களை முகாமிற்கு அனுப்பும் பணிகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.அப்போது, ரங்ககோபுரம் அருகே உள்ள லட்சுமி விலாஸ் மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த முதியவருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அந்த முதியவரை தாக்கி வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர். முதியவரை போலீஸ்காரர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் முதியவரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Comments are closed.