ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நாளை (செப்.3) ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை: பக்தர்களுக்கு அனுமதி உண்டா?* திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் விளக்கம்!
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இன்றும் (செப்டம்பர் 2) நாளையும் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில்
பங்கேற்கிறார். நாளை புதன்கிழமை திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரெங்கநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் நாளைய தினம் மதியம் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மதியம் 1 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் வழக்கம்போல பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.