Rock Fort Times
Online News

தேசிய விளையாட்டு நாள்: திருச்சியில் நடைபெற்ற மனிதச் சங்கிலி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு..!

இந்திய ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேசிய விளையாட்டு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி தேசியக் கல்லூரி, இந்திய தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு (பிஎப்), ரோட்டரி அமைப்புகளான திருச்சி பட்டர்பிளை, திருச்சி டிசி பிரைடு ஆகியவை இணைந்து மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வினை திருச்சிராப்பள்ளி காவிரி மேம்பாலத்தில் நடத்தின. தேசியக் கல்லூரியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற இம்மாபெரும் மனிதச் சங்கிலியை, தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இம்மனிதச் சங்கிலியில் மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிறந்த பதாகைகளுக்கு, அமைச்சர் முன்னிலையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வில், தேசியக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன், துணை முதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்