சத்தீஸ்கர் மழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்… திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அங்கேயே தங்கி கட்டிட பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், திருப்பதி கோயிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Comments are closed.