அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்று மாநகரில் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம், வில்லியம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாக அதிமுக ஓட்டுநர்கள் அணி மாவட்டச் செயலாளர் ஞானசேகர், வார்டு பொறுப்பாளர் ஓம்ராஜ், ஆட்டோ ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஜான் பீட்டர், மாணவரணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட இணைச்செயலாளர் கார்த்திகேயன், நாகநாதர் பாண்டி, மீனவர் அணி நிர்வாகி ஆதவன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் சுரேந்தர், சக்திவேல் ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல உறையூர், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூர் நான்கு சாலை சந்திப்பு, பிஷப் ஹீபர் சாலை, அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் அனுமதியின்றி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.