அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய திருச்சி வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள அவரை இன்று(24-08-2025) கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். புதிதாக கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், இந்த கட்சியில் இணைந்த உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உருவாக்கி தரப்படும். அதிமுக எப்படிப்பட்ட கட்சி என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். தனிப்பட்ட நபர் கட்சி அல்ல. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. திமுக, தேமுதிக கட்சிகள் எப்படிப்பட்டது என்பதும் உங்களுக்கு தெரியும். யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, பொதுமக்களுக்கு சேவைசெய்கிறார்களோ, தலைமை கழகத்திற்கு விசுவாசியாக இருக்கிறார்களோ அவர்கள் கட்சியில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். சாதாரண தொண்டரும் அதிமுகவில் உயர்ந்த நிலைக்கு வரலாம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை உடைக்க யார்,யாரெல்லாம் முயற்சி செய்தார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. காரணம் இந்த கட்சியை எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் உருவாக்கி மக்களுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இதனை யாரும் எதுவும் செய்ய முடியாது. புதிதாக இணைந்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
Comments are closed.