முன்னாள் மத்திய மந்திரியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (வயது 79) இன்று காலை காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.