பொதுமக்களின் குறைகளை ஒரே இடத்தில் தீர்க்கும் பொருட்டு “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பலர் பயன்பெற்றுள்ளனர் . தற்போது அடுத்த கட்டமாக முகாம் நடைபெறும் வார்டு மற்றும் இடங்களை மாநகராட்சி
ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில்,
திருச்சி மாநகராட்சி வார்டு பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது . இம்முகாம்கள் வாயிலாக நகர்ப்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, நாளை 19.08.2025ம் தேதி மண்டலம் 4, வார்டு எண் 53க்கு யானை கட்டி மைதானம் அருகில் உள்ள பி. எஸ். எஸ். திருமண மண்டபத்திலும், மண்டலம் 5, வார்டு எண்.27 மற்றும் 28க்கு உழவர் சந்தை மைதானத்திலும், 21.08.2025ம் தேதி மண்டலம் எண் 1, வார்டு எண் 4க்கு திருவானைக் கோவில் ஶ்ரீமத் ஆண்டவர் கலைக் கல்லூரியிலும், 21.08.2025ம் தேதி மண்டலம்2, வார்டு எண் 20க்கு மரக்கடை குடிநீர் மேல்நிலை நீர்தேகக்க தொட்டி வளாகத்திலும் 22.08.2025ம் தேதி மண்டலம் எண் 3, வார்டு எண் 38 மற்றும் 43 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் பிரகாஷ் மஹால் அரியமங்கலத்திலும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறுகிறது. மேலே அறிவிக்கப்பட்ட
அந்தந்த வார்டு பகுதி மக்கள் மட்டும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்ற வார்டு களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.