திருச்சியில் நாளை (ஆக.19) தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை (19.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.