திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும்…* மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு!
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 18) திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் , ஒரு குழந்தைக்கு விநாயகர் போல வேடம் அணிவித்து கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்சி மாநகராட்சி 62-வது வார்டு ராமச்சந்திர நகர் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர், 80 செண்ட் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. அந்த இடத்தை உடனடியாக மீட்டெடுத்து அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த விநாயகர் சிலையை, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நிறுவி மீண்டும் பக்தர்கள் வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.