திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். மதுரை கோட்டம், சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே லெவல் கிராசிங்கில் கேட் கீப்பராக உதயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் நேற்று (ஆக.17) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ரயில்வே கேட் வழியாக மது போதையில் வந்த இருவர், மூடப்பட்டிருந்த கேட்டை திறக்கும்படி வாக்குவாதம் செய்தனர். அதற்கு கேட் கீப்பர் ரயில் வரும் நேரம் நெருங்கிவிட்டது, அதனால் கேட்டை திறக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் அவரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கேட் கீப்பர் உதயகுமாரிடம் தகராறு செய்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக பாக்யராஜ்(24) என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.