தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேபோல கட்சிகள் தங்களது பலத்தை காட்ட மாநாடுகள் நடத்தி வருகின்றன. அந்தவகையில் மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடும், கடலூரில் தேமுதிக மாநாடும் நடைபெற இருக்கின்றன. அதேபோல, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று( ஆக. 16) நேரில் பார்வையிட்டார். பின்னர் மாநாட்டு பணிகள் குறித்து கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ ,துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் மதிமுக சார்பில் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது.
Comments are closed.