மதுரை, திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச் செல்வி (வயது 24). பட்டதாரி. பாண்டிச்செல்வி நேற்று (ஆகஸ்ட் 8) மதியம் விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.