இம்மாத இறுதியில் இபிஎஸ் திருச்சியில் சுற்றுப்பயணம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்…!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இபிஎஸ் இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஆக.27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் முன்கூட்டியே 25-ந் தேதிக்கு முன்னதாக அவர் திருச்சிக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பேசும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். புத்தூர் நான்கு ரோடு, மரக்கடை எம்ஜிஆர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு இடம் இறுதி செய்யப்பட்டு போலீஸ் அதிகாரிகளின் அனுமதிக்காக அனுப்பப்படும் என்று தெரிகிறது. இடத்தை தேர்வு செய்யும் பணியின் போது அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம், ஜெ.,பேரவை மாவட்டச் செயலாளர் ஆவின் கார்த்திகேயன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், பகுதிச் செயலாளர்கள் ராஜேந்திரன், என்.எஸ்.பூபதி, ரோஜர், ஏர்போர்ட் விஜி ,ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் பொன்னர், நிர்வாகிகள் செல்லப்பா, நத்தர்சா, செல்வராஜ், ராஜ்மோகன், தில்லை விஸ்வா, பாலக்கரை ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.