மாநில அளவில் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி: திருச்சி மத்திய மண்டலம் 4 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் வென்று அசத்தல்!
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை ஒத்திவாக்கதில் கடந்த 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையில் உள்ள 9 மண்டலங்களிலிருந்து சுமார் 300 ஆண், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். மத்திய மண்டல காவல்துறை சார்பாக 30 ஆண் மற்றும் பெண் போலீசார் பங்கேற்றனர். இதில், ஒட்டுமொத்த மண்டலங்களில் திருச்சி மத்திய மண்டலம் 4வது இடம் பிடித்தது. இப்போட்டியில் மத்திய மண்டல போலீசார் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களும், சுந்தரலிங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களும். ரஞ்சித்குமார் ஒரு வெள்ளி பதக்கமும், திருச்சி மாவட்டம், சோபியா லாரன்ஸ் ஒரு தங்க பதக்கமும், திருவாரூர் மாவட்டம் ஆனந்தன் ஒரு வெள்ளி பதக்கமும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி, சங்கீதா தலா ஒரு வெள்ளி பதக்கமும். கீரத்தனா 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களும், கரூர் மாவட்டம் சிவசக்திக்குமார் ஒரு வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்கள். மேலும், ஆண்கள் கார்பைன் துப்பாக்கி சுடுதலில் 25 -வது இடமும், பெண்கள் கார்பைன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடமும் மற்றும் ஆண்கள் ரிவால்வர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 2-வது இடமும் பெற்று 3 கேடயங்களும் வென்றுள்ளார்கள். போட்டியில் வெற்றி பெற்ற போலீசாரை இன்று ( ஆகஸ்ட் 7) மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் வெகுவாக பாராட்டினார்.
Comments are closed.