திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்…!* அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!
திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் அன்பில் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமினை நடத்தின. முகாமை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் சரிபார்த்தல், இசிஜி, நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களால் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் அன்பில் அறக்கட்டளையின் சார்பாக முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது. முகாமில், திருச்சி கிழக்கு கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சீதாலட்சுமி, முருகானந்தம், பியூலா மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments are closed.