எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…* மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்கிற பெயரில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, கே.சி.பரமசிவம், ராஜசேகர், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், நிர்வாகிகள் பத்மநாதன், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, பூபதி, ராஜேந்திரன், எம் ஆர்.ஆர். முஸ்தபா, கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்தும், இந்த மாத இறுதியில் திருச்சிக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும், எழுச்சி பயணம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாஸ், வக்கீல் ராஜேந்திரன், ஞானசேகரன், பாலாஜி, ஜோசப் ஜெரால்டு, ஜான் எட்வர்ட் ,வெங்கட் பிரபு ,லோகநாதன், நிர்வாகிகள் பொன்னர், சுரேஷ்குமார், கருமண்டபம் சுரேந்தர், சில்வர் சதீஷ்குமார், சீனிவாசன், கணேசன், வெல்லமண்டி கன்னியப்பன், முருகன், அக்பர் அலி, தினகரன், வினோத் குமார், கார்த்திகேயன், பிச்சைமணி, பேக்கரி முருகன், உறந்தை முத்தையா, ரவி, வெஸ்லி, பன்னீர்செல்வம் ராஜாளிசேகர், செல்வமணி, வசந்தகுமார், கலைப்பிரிவு சதீஷ்குமார், சந்திரசேகர், கீழக்கரை முஸ்தபா, குமார், ஒத்தக்கடை மகேந்திரன், முத்துக்குமார், கேசிபி ஆனந்த், செல்வமணி, ஜெயந்தி சிவா, கிராப்பட்டி கமலஹாசன், அப்பாகுட்டி, சரவணன், பாலு, மகேந்திரன், டிபன் கடை கார்த்திகேயன்,
வக்கீல் தினேஷ் பாபு, ஐ.டி.நாகராஜ், குருமூர்த்தி, நாட்ஸ் சொக்கலிங்கம், தில்லை விஷ்வா, கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ. ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.