ரோட்டரி மாநாட்டில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் எம்.முருகானந்தம் அழைப்பு…!
பன்னாட்டு ரோட்டரி என்பது சமூக சேவையை நோக்கமாக கொண்ட சர்வதேச அமைப்பாகும். இந்தியாவில் இன்டர்நேஷனல் ரோட்டரி ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக திறம்பட பணியாற்றி வருகிறார். இந்நிலையில் “லீடு-2025” என்ற பெயரில் சென்னையில் ரோட்டரி இந்தியா லீடர்ஷிப் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் ஆக. 23, 24 தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை நேரில் சந்தித்து ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் மற்றும் எக்ஸெல் குழும நிறுவனங்களின் தலைவர் எம்.முருகானந்தம் வழங்கி அழைப்பு விடுத்தார். அப்போது ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.