”உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், 17ம் தேதி பொதுக்குழு அறிவித்து இருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாமக பெயரில் பொதுக்குழு கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டங்களுக்கும், கட்சி விதிகளுக்கும் புறம்பானது. உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள். இது சம்பந்தமாக விழுப்புரம் காவல்துறையிடம் புகார் கொடுத்தேன். அதேபோல் சைபர் கிரைம் துறையிடமும் புகார் கொடுத்து இருக்கிறேன். அந்த ஒட்டு கேட்கும் கருவி எல்லாவற்றையும் காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். ஒரு பக்கம் சைபர் கிரைம் காவல்துறை விசாரிக்கிறது. மறுபக்கம் நானே ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி விசாரணை நடத்தி வருகிறேன். விரைவில் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். இது பிரைவேட் ஏஜென்சி. போலீசாருக்கும், சைபர் கிரைம் அதிகாரிகளுக்கும் உதவியாக இருக்கும். இதில் வேறு ஒன்றும் கிடையாது. கட்சியின் நிறுவனர், தலைவர் நான் தான். என்னை கட்சியினர் சந்திக்க கூடாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.