ஒரே இடத்தில் தொடர்ந்து 4வது முறையாக டியூட்டி: திருச்சி,சோமரசம்பேட்டை காவல்நிலையத்தின் சூப்பர்-டூப்பர் பவராக செயல்படும் எஸ்.ஐ பூபதி..!- மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ் நடவடிக்கை எடுப்பாரா?…
திருச்சி மாவட்ட எஸ்.பி கட்டுப்பாட்டில் மொத்தம் 33 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் சோமரசம்பேட்டை காவல்நிலையமும் ஒன்று. இங்கு நான்காவது முறையாக தொடர்ந்து உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பூபதி.
இவரை எங்கு பணிமாறுதல் செய்தாலும், யார் கையில காலுல விழுந்தாவது, சோமரசம்பேட்டை காவல்நிலையத்திற்கே மீண்டும் டிரான்ஸ்பர் ஆர்டர் வாங்கி வந்துவிடுகிறார். இதற்கு எல்லாம் காரணம் வளம் சேர்க்கும் வருமானம்தான். காவல் நிலையம் வரும் எல்லா புகார்களையும் தான் மட்டுமே விசாரிக்க ஆசைப்படுவார். எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சிகூட எடுக்கமாட்டார். புகார் மனுக்களுக்கு சி.எஸ்.ஆர் தருவது கிடையாது. அப்படியே கொடுத்தாலும் எப்.ஐ.ஆர் போடமாட்டார். அனைத்து விவகாரங்களையும் தானே நேரடியாக பஞ்சாயத்து செய்து இரண்டு தரப்பிலும் வாரிசுருட்டிக்கொண்ட பிறகே வழக்கு ஏதும் இல்லாமல் பைசல்செய்து வைப்பதில் எஸ்ஐ. பூபதி படுகில்லாடி என இவர்மீது புகார் மழை பொழிகிறது. தொடர்ந்து 4 முறை ஒரே ஸ்டேஷனில் இவர் பணிபரிவதால் சட்டவிரோதிகள் அனைவருக்குமே எஸ்.ஐ பூபதிதான் ஆபத்பாண்டவனாக, அநாத ரட்சகனாக செயல்படுகிறார். இதன் காரணமாக தனக்கு ஒத்துவராதவர்களை எல்லாம் மிரட்டுவது, உருட்டுவது, பணம் பறிப்பது என பூபதியின் அதிகார எல்லை மீறும் செயல் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. ஆனாலும் ஸ்டேஷனில் உள்ள எஸ்.பியின் தனிப்பிரிவு போலீஸ் எந்த காரணத்திற்காக பூபதி பற்றிய ரிப்போர்ட்டை மேலிடத்திற்கு அனுப்ப மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் டி.எஸ்.பி – இன்ஸ்பெக்டர் ஆகியோரை தாண்டிய சூப்பர் பவராக செயல்படும் எஸ்.ஐ பூபதியின் செயல்பாடுகள் குறித்து முறையாக விசாரித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. பி.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
Comments are closed.