Rock Fort Times
Online News

திருச்சியில் டெல்டா மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்…!* அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது!

டெல்டா மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மெய்யநாதன், டிஆர்பி ராஜா, எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், சி.வி.கணேசன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், கே.கே.செல்வ பாண்டியன்,துரை சந்திரசேகர், பழனிவேல், சாக்கோட்டை அன்பழகன், கௌதமன், பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையில் எந்த மாவட்டம் அதிக அளவிலான உறுப்பினர்கள் சேர்த்துள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதுவரை அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்டத்திற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் காலத்தில் குறிப்பிட்ட உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்