நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கியது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன் மற்றும் பாஸ்கர பாண்டியன் ஆகிய ஐந்து பேருக்கு முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர்கள் ஐந்து பேரும் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ உறுதிமொழியின் உள்ளடக்கங்களைப் பதிவு செய்து, அதை நிறைவேற்ற, நீதிபதி பட்டு தேவானந்த், இரண்டு வார கால அவகாசம் வழங்கினார். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, அவர்கள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் நேரத்தைச் செலவிட உறுதி அளித்தனர். மேலும், தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து உணவு ஏற்பாடு செய்யவும், அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர்.
Comments are closed.