தமிழ்நாடு அரசு சார்பில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த முகாம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறும் தேதி, இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. 29.07.2025-ம் தேதி மண்டலம் எண்5, வார்டு எண் 8 மற்றும் 9 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு காவேரி மஹாலிலும்,31.07.2025-ம் தேதி மண்டலம்1, வார்டு எண் 3 மற்றும் 7 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் ஸ்ரீரங்கம் தேவி மண்டபத்திலும், 05.08.2025ம் தேதி மண்டலம் எண் 2, வார்டு எண் 32 மற்றும் 33 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் எடத்தெரு மெயின் ரோடு பழைய கோவில் வளாகத்திலும் நடைபெறுகின்றன. மேற்கண்ட தேதிகளில் அந்தந்த வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து பயன்பெறலாம் என்றும், மற்ற வார்டுகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.