Rock Fort Times
Online News

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா எம்.பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் 60 பேர் கைது- போலீசாரிடையே தள்ளுமுள்ளு…!

திமுக துணை பொதுச் செயலாளரும், மேல்-சபை எம்.பி.யுமான திருச்சி சிவா முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழர் தேசம் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சி சிவா எம்.பி யின் வீட்டை முற்றுகையிட வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே ஒன்று திரண்டனர். தமிழர் தேசம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி அமைப்பாளர் துரை. குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவேல், மாநில செயலாளர் பரமசிவம், மாவட்டச் செயலாளர் வள்ளல் மணி உள்ளிட்ட கட்சியினர், தொண்டர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜா காலனியில் உள்ள சிவா எம்.பி. வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்