பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோவில் பணிபுரியும் 12 விஞ்ஞானிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சமயபுரம் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வருகை தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோவிலின் சார்பில் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து கோவில் கொடிமரத்தை வணங்கிய அவர்கள் மூலஸ்தான அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
Comments are closed.