திருச்சி, திருவெறும்பூரில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் ஜூலை 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த முகாம் திருவெறும்பூரில் உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. 8, 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட வேலை தேடுவோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்று பயன் பெறலாம். தங்களைப் பற்றிய சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இருபாலரும் பங்கேற்கலாம். இந்த முகாமை அன்பில் அறக்கட்டளை நிறுவனரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.