அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 பிரிவில் அடங்கியுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இம்மாதம் 12ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தொட்டியம் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் 197 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலிருந்து இந்தத் தேர்வுக்கு 55 ஆயிரத்து 456 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுப் பணிகளுக்கென 197 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணை ஆட்சியர் நிலையில் 11 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 66 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்கு பிறகு வரும் நபர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தேர்வு எழுத வரும் நபர்கள் கைப்பேசி உள்ளிட்ட எந்தவகையான மின்னணு சாதனங்களையும் எடுத்து வர அனுமதி இல்லை. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடாமல் விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
Comments are closed.