திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்… * பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!
பாங்காக்கிலிருந்து கோலாலம்பூர் வழியாக விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் 28 பொட்டலங்களில்
11.8 கிலோ எடையுள்ள “ஹைட்ரோபோனிக்” என்ற உயர்ரக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.12 கோடி என கூறப்படுகிறது. அந்த கஞ்சாவை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, யாரிடம் கொடுக்க சொன்னார்கள்?, இதில் சர்வதேச போதை கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என அந்த பயணியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments are closed.